ஆளுநர் தலைமையில் ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடல்

‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடலின் (‘Northern Province Round Table’) இரண்டாவது கலந்துரையாடல் வடமாகாண கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று  மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் அவர்கள் ‘வடமாகாணத்தின் பொருளாதார எதிர்காலம்’ தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதுடன் , இக் கலந்துரையாடலில் ஆர்வமுள்ள எவரும் கலந்துகொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment