ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல்

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலா தீட்சித்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் “அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சி எல்லைகளைத் தாண்டி அனைவராலும் மதிக்கத்தக்க தலைவர் ஷீலா தீட்சித் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் 81 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு கட்சித் தலைவர்கள், ஆதரவாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment