அரச பாடசாலை அதிபர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க அரச ஆசிரியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதிலுமுள்ள ஆசிரியர்களும், அதிபர்களும் ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இப்போராட்டத்துக்கு தீர்வு கிட்டவில்லையாயின் பாடசாலை இரண்டாம் தவணைக் காலப் பகுதிக்குள் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment