சாட்சியங்களை இரகசியமாக பெற தெரிவுக்குழு தீர்மானம்!

எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் குறித்து விசேட வேலைத்திட்டமொன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புலனாய்வுத்துறை அதிகாரிகளை ஒளிப்படம் எடுப்பதற்கும் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி, அரச புலனாய்வு சேவை பிரதானி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரட்ன மற்றும் அதன் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.
அதேநேரம், பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அதன் பொலிஸ் பரிசோதகர் தரங்க பத்திரண ஆகியோரும் எதிர்வரும் 24ஆம் திகதி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment