திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் மீண்டும் புத்தவிகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் தென்கயிலை ஆதீன குரு முதல்வர்.
விடயம் தொடர்பில், அவர் தெரிவித்ததாவது,
திருகோணமலையில் மீண்டும் புத்தவிகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டுள்ளது. கடந்த திங்கள் கிழமை முதல் கன்னியா பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் அதனை அகற்றி அங்கு புத்த விகாரை அமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று கேட்டால், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே விகாரை அமைக்கும் பணியை முன்னெடுக்கின்றோம் என்று தெரிவிக்கின்றனர்.
ஆனால் அவ்வாறு விகாரை அமைப்பதற்கு எந்த அனுமதியும் எவராலும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் இந்த அத்துமீறலைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-என்றார்.
0 comments:
Post a Comment