தமது கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலையிருக்காது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான தீர்வு உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவேன் என சர்வதேச நாடு ஒன்றின் முன்னிலையில் எழுத்துமூல உறுதி மொழி வழங்குவாராயின் அவருக்கு ஆதரவு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் மூன்றாம் இரண்டாம் குறுக்கு வீதிகளை கம்பிரலிய திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் இன்று பிற்பகல் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதற்கென கம்பிரலிய திட்டத்தின் கீழ் 40இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்த ஒதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஓதுக்கியுள்ளார்.
இதன் புனரமைப்பு பணிகள் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
0 comments:
Post a Comment