இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மூன்றில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், முதலாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 28 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 31 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக கொழும்பு, ஆர்.பிரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment