உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தெடர்பில் சபாநாயகரினால் தமக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுகள் என குறிப்படப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைவாக றிசாத் பதியுதீன் அமைச்சருக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டும் இல்லை என சபாநாயகர் அறிவித்திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிண்ணியா மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாறினார். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தெடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் சில பிரிவுகளை சிலர் நிராகரிப்தற்கு முயற்சிக்கின்றனர் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு செய்வதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு உதவி புரிவதாக அமையும் என்று பிரதமர் கூறினார். றிசாத் பதியுதீன் அமைச்சருக்கு எதிரான எந்தவித குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படவில்லை.
இதே போன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத்தளபதி சாட்சியமளித்த போது பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தமக்கு எந்தவித அழுத்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்ததையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த புலனாய்வுப் பிரிவின் அறிக்கை சட்டமா அதிபர் மற்றும் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டள்ளது. அவர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் பிரதமர் கூறினார்.
இதில் சில குற்றச்சாட்டுகளை சமர்ப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட எந்த விடயங்களும் இல்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பொலிஸ் புலனாய்வுப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவான அறிக்கை அதிமேற்றானியார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டுக்கு வருகை தந்த பின்னர் இந்த அறிக்கையை கையளிப்பதற்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.
இதே போன்று பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் பாராளுமன்றத்துக்கும், சபை உறுப்பினர்களுக்கும் இதனை வழங்குவதற்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பதத்தில் சந்தேக நபர்கள் சார்பில் முன்நின்ற சட்டத்தரணிகள் இந்த அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இது சாட்சியங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அமையும். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்துடன் இணைவதற்கு தேவையான பின்புலத்தை வகுப்பதாகவும் அமையும்;.
புலனாய்வு பிரிவினரால் 2 மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையை குறைத்து மதிப்பீடு செய்வதே காரணம் என்றும் பிரதமர் கூறினார்.
புலனாய்வுபிரிவு தொடர்பாக நீலிக்கண்ணீர் வடிப்போரின் உண்மையான சுயரூபம் இந்த செயற்பாடுகள் மூலம் வெளிப்படுவதாகவும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment