அரச நிறுவனங்களுக்கு உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளின் பெயர்களை வைக்கும் நடவடிக்கை எதிர்காலத்தில் தடை செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்களை வைப்பது சிறந்த விடயமல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் 3 மாதங்களுக்கு முன்னர் அனைத்து அரசியல்கட்சிகளுக்கும் அறிவித்ததாகவும் 75 சதவீதமான அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment