வட - கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ் கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.
பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த நேர்முகத்தேர்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது வரை காலமும் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் தென்னிலங்கையிலேயே இடம்பெற்று வந்த நிலையில், தற்போது இந்த நேர்முகத் தேர்வுகள் வடமாகாணத்தின் மத்திய இடமான வவுனியாவில் நடைபெற்று வருவதுடன் தெரிவு செய்யப்படுபவர்களுக்கான ஆரம்ப பயிற்சி முகாமும் வடமாகாணத்திலேயே இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment