கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில்

எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­ப­ல­சேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்­பாடு செய்-­துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்கே முதன்­மை­ய­ளிக்­கப்­படும் என ஞான­சார தேரர் தெரிவித்துள்­ளதால் முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள். எனவே அந்த மாநாட்­டினை நடத்­தாது நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வொன்­றினைப் பெற்றுக் கொள்­ளு­மாறு முஸ்லிம்களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு நேற்று பதில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது.
முஸ்­லிம்­களின் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பின் தலைவர் ஐ.என்.எம்.மிப்­லால் தலை­மை­யி­லான குழு­வினர் குறிப்­பிட்ட மக­ஜரைக் கைய­ளித்­துள்­ளனர். மக­ஜரின் பிரதி பாது­காப்பு செய­லா­ள­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
மக­ஜரில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ‘பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கண்டி நகரில் சுமார் ஒரு இலட்சம் பௌத்­தர்­களும் 10 ஆயிரம் பௌத்த குரு­மார்­களும் ஒன்­று­கூ­ட­வுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். அர­புக்­கல்­லூ­ரிகள், தௌஹீத் பள்­ளி­வா­சல்கள், காதி­நீ­தி­மன்­றங்கள், ஹலால் சான்­றிதழ் என்­ப­ன­வற்­றுக்கு எதி­ராக தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். இதனால் முஸ்­லிம்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளார்கள்.
எனவே அவ­ச­ர­கால சட்டம் அமு­லி­லுள்ள நிலையில் இவ்­வா­றான இன­வா­தத்தைத் தூண்­டி­விடும் மாநா­டுகள் நடாத்­தப்­ப­டக்­கூ­டாது என தெரி­விக்க விரும்­பு­கிறோம். இவ்­வா­றான மாநா­டுகள் சமா­தா­னத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­து­வ­ன­வாக அமையும். எனவே 7 ஆம் திகதி கண்டியில் நடைபெற ஏற்பாடாகியுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டுக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment