சீனாவிலிருந்து கார்கள் மற்றும் குறிப்பிட்ட சில வாகனங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார சக்திகளான அமெரிக்காவும் சீனாவும் சமீப காலமாக பொருளாதார ரீதியில் கடுமையாக மோதிக் கொண்டன.
அமெரிக்காவும், சீனாவும், தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவு வரிவிதித்தன. இந்நிலையில் சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவேய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்துள்ளது.
சிறப்பு அனுமதி பெறாமல் அமெரிக்க தொழில்நுட்பங்களை வாங்க தடை, அமெரிக்க தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகளில் தயாரிப்புகளை பயன்படுத்த தடை என, சீன நிறுவனமான ஹுவாய் மீது அதிபர் டிரம்ப் ஒரேநேரத்தில் இரட்டைத் தாக்குதலை தொடுத்துள்ளார்.
இந்நிலையில் மேலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில கார்களைத் தடை செய்யவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த தடை விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனுடன் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தி சமீபத்தில் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment