இலங்கையின் புகழ்பெற்ற நபர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ள நான், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் விவாதம் புரிய மாட்டேன் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இது தொடர்பில் இன்று (02) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த சங்கம் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அல்லவெனவும், குறித்த ஒரு அரசியல் குழுவின் சங்கம் எனவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு தான் நியமிக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் எனவும், அமைச்சுப் பதவியை வழங்க தொழிற்சங்கம் ஒன்றுக்கு முடியாது எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment