'பிக்பாஸ்' வோட்டிங் : உண்மையா, பொய்யா ?

பிக்பாஸ் சீசன் 3 ஒரு மாதத்தைத் தொட உள்ள நிலையில் முதல் நாளிலிருந்தே பரபரப்பாகச் சென்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் அமைதியாக கடந்த நிகழ்ச்சி, பின்னர் நுழைந்த போட்டியாளரான மீரா மிதுனால் கடும் சண்டைகளைச் சந்திக்க ஆரம்பித்தது.
வீட்டில் உள்ள ஒவ்வொருவருடனும் அவர் சண்டை போடுவதை தன் வேலையாக வைத்திருந்தார்.எலிமினேஷனுக்கான நாமினேஷனில் தொடர்ந்து மீரா மிதுன் கடந்த மூன்று வாரங்களிலும் இருந்து வருகிறார்.
பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா இதுவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வனிதா எப்படியும் காப்பாற்றப்படுவார் என்றுதான் நேயர்கள் எதிர்பார்த்தார்கள். அவர் இருந்தால்தான் சண்டைகள் அதிகம் வரும் என்ற கருத்து நிலவியது.
ஆனால், வனிதா வெளியேற்றப்பட்டார். நேற்று, மோகன் வைத்யா வெளியேற்றப்படலாம் என நேயர்கள் முன்னரே யூகித்திருந்தார்கள்.
அது சரியாகவே நடைபெற்றது. ஆனால், நிகழ்ச்சியில் முதலில் காப்பாற்றப்பட்டவர் மீரா மிதுன் என கமல்ஹாசன் சொன்ன போது அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அபிராமி, சேரன், சரவணன் ஆகியோரில் ஒருவர்தான் அதிக வாக்குகள் பெற்று முதலில் காப்பாற்றப்படுவார்கள் என்று பலரும் கருதினார்கள்.
ஆனால், அதற்கு மாறாக மீரா மிதுன் முதலில் காப்பாற்றப்பட்டுள்ளார் என்றது பலருக்கும் அதிர்ச்சியையும் அளித்தது.
சமூக வலைத்தளங்களிலும் நேயர்களின் வாக்குப்படி இல்லாமல் அவர்களாகவே சிலரை வைத்துக் கொண்டும், சிலரை வெளியேற்றவும் முடிவு செய்கிறார்கள் என்று சொல்லி வருகிறார்கள்.
வனிதா இல்லாத காரணத்தால் கடந்த வாரம் சண்டைகள் அதிகமில்லை. எனவே, மீராவையும் வெளியே அனுப்பிவிட்டால் சண்டைகள் அதிகம் வர வாய்ப்பில்லை எனவேதான் மீராவைக் காப்பாற்றியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.
இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் மீரா மிதுன் கண்டிப்பாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரம் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment