ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடித்த 'கடாரம் கொண்டான்' படம் கடந்த வாரம் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் படத்தின் வசூல் பரவாயில்லை என்று வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ஆக்ஷன் இருக்கும் அளவிற்கு கதை இல்லை என்பதுதான் ரசிகர்களின் குறையாக இருக்கிறது.
மலேசியாவைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் மலேசிய போலீசைப் பற்றி குறைவாக மதிப்பிட்டுச் சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரியும், அவர்களைச் சார்ந்தவர்களும் பணத்திற்காக டான்களுக்குத் துணை போவது போலவும், சக போலீசைக் கொல்வது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. அதனால், இப்படத்தையும், இதன் தெலுங்கு டப்பிங்கையும் மலேசிய சென்சார் போர்டு திரையிடத் தடை விதித்துள்ளது.
0 comments:
Post a Comment