ஃபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக SHOELACE என்ற புதிய செயலி

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக SHOELACE என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளது. ஆர்குட்-க்கு பிறகு கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை கூகுள் அறிமுகம் செய்தது. 
ஆனால், அது பெரிய அளவில் வெற்றிபெறாததை அடுத்து, தற்போது SHOELACE என்ற சமூக வலைதளம் மூலம் கூகுள் களமிறங்கியுள்ளது. SHOELACE சமூக வலைதளம் போன்று தான் என்றாலும் மொபைல் செயலி வடிவில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
கிட்டத்தட்ட சீன சமூக வலைதள செயலியான Helo, ShareChat போன்றவற்றுக்கு போட்டியாக SHOELACE இருக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது SHOELACE சமூக வலைதள செயலி சேவை நியூயார்க் நகரத்தில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.
 விரைவில் பிற நாடுகள், நகரங்களிலும் SHOELACE சேவை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. பல முறை ஃபேஸ்புக், டிவிட்டருக்கு போட்டியாக சமூக வலை தளத்தை உருவாக்க முயன்று தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நிலையில், SHOELACE வெற்றியை தருமா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம். 
இதற்கிடையே, கூகுள் பிளஸ் சேவை 2011 ஜூன் 28-ம் தேதி தொடங்கப்பட்டு, 2019 ஏப்ரல் 2-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment