ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோஹ்லி

20 இவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்திருந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை கேப்டன் விராட்கோஹ்லி முறியடித்துள்ளார்.

புளோரிடாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் ஒரு சாதனை படைத்து வரும் விராட்கோஹ்லி இந்த போட்டியிலும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

20 ஓவர் போட்டியில் 8392 ரன்களுடன் முதலிடத்தில் இருந்த ரெய்னாவை வீழ்த்தி, 8416 ரன்களுடன் இந்திய அணியின் சார்பில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட்கோஹ்லி முதலிடம் பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா (8291), தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (6953) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment