முல்லைத்தீவில் கடும் வறட்சி ; மக்கள் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் கெடும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 17ஆயிரத்து 444 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து, 805 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை முல்லைத்தீவு மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிமனை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, துக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரத்து, 967 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 296 பேரும், கரைதுறைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்து, 799 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 797 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று, துணுக்காய் பிரதேசத்தில் ஆயிரத்து 123 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து, 426 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 131 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேரும், வெலிஓயா பிரதேசத்தில் 3 ஆயிரத்து, 424 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து, 804 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment