சிறந்த தலைமைத்துவம் ஒன்று இல்லாததன் காராணத்தால்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல்வேறு நெருக்கடிகள் தலைதூக்கியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகலை மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க சுகவீனம் காரணமாக தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
அவரது நலம் குறித்து, விசாரணை செய்வதற்காக எதிர்கட்சித் தலைவர் நேற்று மாலை குருநாகலை போதனா மருத்துவமனைக்கு பயணம் செய்தார்.
இந்த பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய அவர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே மேற்குறித்த விடயத்தைத் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பலரும் தன்னுடன் இணைந்து கொள்வதற்கான பேச்சுக்களை நடத்திவருவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு உறுப்பினர்களை அக் கட்சியிலிருந்து இழுத்தெடுப்பதன் மூலம் அக் கட்சியில் நெருக்கடியை ஏற்படுத்த நோக்கமில்லை என்றும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment