உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்: ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுக்க நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைப்பதற்காக திகதி ஒன்றைக் கோர எதிர்பார்ப்பதாக அந்த குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோரிடம் தாக்குதல் குறித்து சில சாட்சியங்களை பெறுவதற்காக நாளை தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க எதிர்ப்பார்ப்பதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ தளபதி மேகேஷ் சேனநாயக்க ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment