கட்சியை கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்குஇடமளிக்க முடியாது

பின்கதவால் ஐக்கியதேசிய கட்சியை கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்கு இடமளிக்க முடியாது என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
சனிக்கிழமை (3)இரவு கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற கூட்டணி முக்கியமானது, இதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் கூட்டணி அமைப்பதற்கு தயார் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பிலேயே எனக்கு பிரச்சினை உள்ளது.
 
இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியுடன் சம்மந்தமில்லாத சிலர் பின்கதவால் ஐக்கியதேசிய கட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர், ஒன்று அல்லது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியை கட்டுப்டுத்த இவர்களுக்கு இடமளிக்க முடியாது.
 
இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படுமானால் அதன் பொதுச்செயலாளர் பதவி கட்டாயம் ஐக்கிய தேசிய கட்சிக்கே வழங்கப்படல் வேண்டும். கூட்டணியின் முகவரியாக சிறிகொத்த முகவரியே பதிவுசெய்யப்படல் வேண்டும். தலைமைத்துவ சபை தொடர்பான முரண்பாடுகள் தீர்க்கப்படல் வேண்டும்.
 
இவ்வாறு இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்கும் அம்சங்கள் உள்ளடக்கப்ப்படும்வரை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடமளிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment