உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (05) தேசிய ரீதியில் ஆரம்பமாவதாகவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய ரீதியில் 2,678 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு இம்முறை தோற்றுகின்றனர். பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய பரீட்சை இடம்பெறவுள்ளது.
பரீட்சை விதிமுறைகளை மீறும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த வருடத்தில் விதி முறைகளை மீறிய 229 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment