பூனைகளுக்கென பிரத்தியேக பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றுள்ளது.
அல்கோன்குய்ன் என்ற விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 10க்கு மேற்பட்ட பூனைகள் கலந்து கொண்டன.
அழகிய வண்ண உடைகளில் பூனைகள் எஜமானர்களின் கையில் அமர்ந்தபடி பார்வையாளர்களுக்கு காட்சி கொடுத்ததை பலரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
வீதிகளில் சுற்றித்திரியும் பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளை மீட்டு அதனைத் தத்தெடுத்து வளர்க்கும் நோக்கில், இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment