சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் சரத் டாஷ், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்றையதினம் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கை ஏதிலிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment