குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்தார் ராஜித

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுத்துள்ளார்.
வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘வைத்தியசாலைகளில் எந்தவித மருந்து வகைகளுக்கும் தட்டுப்பாடில்லை.
சில வைத்தியசாலைகளில் பணியாற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த அங்கத்துவ வைத்தியர்கள் மற்றும் சில ஊழியர்கள் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்கும் நோக்கில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதான நிலையைத் தோற்றுவித்துள்ளனர்.
இவ்வாறான வைத்தியர்களுக்கும், ஊழியர்களுக்கும் எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment