ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டேங்குகளின் சாகச போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ராணுவ விளையாட்டுகள் என்ற பெயரில் ரஷ்ய ராணுவம் சார்பில், மாஸ்கோவில் ராணுவ டேங்குகள் பங்கேற்ற சாகச போட்டி நடைபெற்றது.
இதில், செர்பியா, சீனா, சிரியா, வெனிசுலா, ஈரான், மங்கோலியா உள்ளிட்ட 25 நாடுகளை சேர்ந்த ராணுவ டேங்குகள் பங்கேற்றன. துல்லியமாக சுட்டுக் கொண்டே வேகமாக சென்று இலக்கை அடைந்த ராணுவ டேங்குகள் வெற்றிபெற்றவையாக அறிவிக்கப்பட்டன.
டேங்குகள் நிகழ்த்திய சாகசங்களை, அந்தந்த நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வான், கடல் பகுதிகளிலும் இதுபோன்ற ராணுவ விளையாட்டுகள் வருகிற 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
0 comments:
Post a Comment