நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது வருவாய் மற்றும் சொத்துக்களுக்கு அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக ஊழல் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்று  இடம்பெற்ற விசாரணையின் போது குறித்த வழக்கில் மூன்று முறை பிரதமராக இருந்த அவர் சவூதி அரேபியாவில் உள்ள இரும்பு ஆலையின் உரிமை தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிரூபிக்க முடியாமல் போனது.
இதன் காரணமாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் நவாஷ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தினால் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு கடந்த ஜூலை மாதத்தில் ஏற்கனவே 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் மீது மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், அவற்றில் ஒரு குற்றச்சாட்டுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட குறித்த தீர்ப்பின் பிரகாரம், நவாஸ் ஷெரீப்பிற்கு 10 வருட சிறைத்தண்டனையும் அவரது மகள் மரியம் நவாஸூக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இது குறித்து மேன்முறையீடு செய்த அவரது வழக்கு நிலுவையில் இருக்கின்ற நிலையில், அவர் செப்டெம்பர் மாதம் பிணையில் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment