ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி வெற்றி

பிக் பஷ் ரி-20 தொடரின், ஏழாவது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
ஹோபர்ட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கிளென் மேக்ஸ்வெல் 47 ஓட்டங்களையும், நிக் லார்கின் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்செர் 3 விக்கெட்டுகளையும், டி ஆர்சி ஷோர்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து, 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ்  அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக மெத்தியூ வாட்  52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சந்தீப் லேமிச்சேன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக டி ஆர்சி ஷோர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment