மூடுபனியால் விபத்து ; எழுவர் உயிரிழப்பு

அரியானா மாநிலத்தில் கடுமையான மூடுபனியால் ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில், சுமார் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. 

விபத்தில்,  7 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

விபத்துக் காரணமாக அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  

இதற்காக ஏராளமான ஜேசிபி வாகனங்கள்  வரவழைக்கப்பட்டன. 

டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது.

 குளிர் காலத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, மிகவும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

காலை வேளையில் அருகில் இருப்பவர்கள்கூடத் தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகனச் சாரதிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மீறி சில இடங்களில் விபத்தும் ஏற்படுகிறது.Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment