புத்தளத்தில் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரைக் கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனமடு – நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மன்னாவெட்டி காட்டுப் பகுதியில் நேற்று மாலை புதையல் தேண்டியவர்களே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணிகள் இடம்பெறுவதாக நவகத்தேகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் அங்கிருந்த பன்னிரெண்டு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 40 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களில் மந்திர வாதி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மற்றும் வான், லொறி, முச்சக்கர வண்டி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் நவகத்தேகம பொலிஸார், அவர்களை ஆனமடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment