வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற 3 பெண்கள் உட்பட ஐவர் கைது


கேரளாவில் சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற  3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூரிலிருந்து சபரிமலை வாவர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த குறித்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள வாவர் பள்ளி வாசலுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் வாவர்சாமி பள்ளிவாசலுக்குள் நுழைய தமிழகத்திலிருந்து சில பெண்கள் வருவதாக கேரள பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட பொலிஸார், 3 பெண்கள் உட்பட 5 பேரை கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களான சுசீலாதேவி, ரேவதி, காந்திமதி, திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து மக்கள் கட்சியின் தொண்டர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுப்ப, கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசு, வாவர் பள்ளி வாசலுக்குள் செல்லவும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றது.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், சபரிமைலையின் புனிதம் காக்கப்பட வேண்டும். சபரிமலை கோயிலுக்குள் 2 பெண்கள் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று வந்த நிலையில், மசூதிக்கு செல்ல பெண்களுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் மசூதிக்குள் பெண்ணுரிமையை நிலைநாட்ட மறுப்பதும், கேளர முதலமைச்சர் பினராயி விஜயன் ஏன் இரட்டைவேடம் தரிக்கிறார் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு இந்துக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்றும் ஒருதலைப்பட்சமான இந்த நடிவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment