தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு!

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகள்  நிறைவு பெற்றதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று பிற்பகல் பேரவைத்தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி அவையை 5 நாட்கள் நடத்துவது என முடிவெடுத்தது. தமிழக ஆளுநரின் உரை மீது கடந்த 4, 5, 7 ஆகிய 3 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. 

மேலும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ், நெல் ஜெயராமன் மற்றும் 5 ரூபாய் மருத்துவர் ஆகியோருக்கு 3-ம் தேதி இரங்கல்  தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் பழனிசாமி இன்று பதிலளித்தார். இத்துடன் பேரவை நிகழ்ச்சிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment