பொலனறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய பிரதேச சபையின் முதலாவது சபை அமர்வு பெரும் கைகலப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மெதிரிகிரிய பிரதேச சபையின் இந்த வருடத்திற்கான முதலாவது சபை அமர்வு சபைக் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் பிரதேச சபைத் தலைவர் சாந்த விக்ரமாராச்சி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பை வெளியிட்டனர்.
தொடர்ந்து சபை நடவடிக்கைகளின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் இரு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
0 comments:
Post a Comment