ஸ்ருதியுடன் கைகோர்க்கும் சேதுபதி

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தவர் ஸ்ருதிஹாசன். 

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிக்காமலே இருந்தார். 

அவருடைய அப்பா கமல்ஹாசன், இயக்கத்தில் நடித்து வந்த 'சபாஷ் நாயுடு' படம் இதற்கு மேலும் தொடர வாய்ப்பில்லை என்ற நிலையில் தான் இருக்கிறது. 

இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படத்தில்தான் ஸ்ருதிஹாசன் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.

'புறம்போக்கு' படம் வெளிவந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனநாதன், இந்தப் படத்தை இயக்க உள்ளார். '96' படம் மூலம் த்ரிஷாவுக்கு ஒரு ரீ-என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் ஸ்ருதிக்கும் ஒரு ரீ-என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment