நிதியமைச்சின் மேலதிக செயலர் எச்.ஜி.சுமனசிங்க சுங்க திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்று காலை வழங்கப்பட்டதாக நிதியமைச்சுத் தெரிவித்துள்ளது.
சுங்கப் பணிப்பாளராக கடமையாற்றிய பீ.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியொருவரை நியமித்ததிற்கு எதிராக சுங்க பணியாளர்கள் நேற்று மாலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
அது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment