மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை மட்டுமல்ல பல கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாகவும் இதற்கு முக்கிய காரணம் யார் என்பதையும் தனியார் பத்திரிகை ஒன்று வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
ஜெயலலிதா இறந்த பிறகும் கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஆம் ஆண்டு நடந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை தொடர்ந்து, வாகன விபத்து – கத்தி குத்து – லொரி விபத்து உட்பட பல்வேறு கொலை முயற்சிகளும் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள துடன் இதில் மற்றொரு காவலாளி படுகாயமடைந்துள்ளார் மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பணம், தங்கக்கட்டிகள், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை போய்யுள்ளன.
இதுகுறித்து கோத்தகிரி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் இதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாகன சாரதி கனகராஜ் மற்றும் சிலர் வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் நடந்த இரண்டு தினங்களில் சேலத்தில் நடந்த வாகன விபத்தில் வாகன சாரதி கனகராஜ் கொல்லப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, முக்கிய குற்றவாளிகளின் மர்ம மரணங்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் கொடநாடு கொள்ளை மற்றும் கொலைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், 5 கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம் இந்த செயல்களை அவர் செய்துள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment