நியூஸிலாந்திடம் சுருண்டது இந்தியா


நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியின் இந்தியா 92 ஓட்டங்களில் சுருண்டது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, இன்று ஹாமில்டனில் நடக்கிறது. இப்போட்டியில் டோனி, கோஹ்லி ஆகியோர் விளையாடவில்லை. இதில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் ஸிகர் தவான்13 ரன்னில் எல்பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ரோகித் சர்மா 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த ராயுடுவும் டக் அவுட்டில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த தினேஸ் கார்த்திக்கும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியா 30.5 ஓவர்களில் 92 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சகால் 18 ஓட்டங்கள் எடுத்தார்.

நியூசிலாந்து சார்பில் பவுல்ட் 5 விக்கெட்களையும், கிராண்டோம் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து 93 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்குகிறது.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment