அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்மொழிவு சபாநாயகரிடம் சமர்ப்பிப்பு!


தேசிய அரசாங்கத்தை அமைத்து அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணி க்கையை அதிகரிப்பதற்கான ஒரு முன்மொழிவு சபாநாயகரிடம் கைய ளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றின் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்லவினால் குறித்த முன்மொழிவு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று காலை கையளிக் கப்பட்டது.
நாடாளுமன்றில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினால் தேசிய அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது எந்த முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 46(4) இன் பிரகாரம், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 48க்கு மேற்படக் கூடாது எனவும், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 45க்கு மேற்படக் கூடாது எனவும் நாடாளுமன்றில் தீர்மானிக்குமாறும் குறித்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment