ஆட்டோ டிரைவராக அவதாரம் எடுத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

திருப்பதி: ஆட்டோ டிரைவராக அவதாரம் எடுத்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் உடன் ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆந்திராவில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு நடைபெற இருக்கும் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று  கணிப்புகள் வெளியாகியுள்ளன.
எனவே, வாக்காளர்களை கவர்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரும் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தன்னுடைய முயற்சிகளில் ஒரு பகுதியாக ஆட்டோக்களுக்கான ஆயுட்கால வரியை ரத்து செய்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆந்திர தலைநகர் அமராவதி சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முதல்வரை வரவழைத்து சன்மானம் செய்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற சந்திரபாபு நாயுடு ஆட்டோ டிரைவர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரின் வாழ் வாழ்த்து கோஷங்களுக்கு இடையே திடீரென்று ஆட்டோ ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment