கவனயீனமான சோதனைச்சாவடி பொலீசார்!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே ஓய்வு அறையில் குட்கா புகைத்த டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 10 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது திருப்பதி மலைக்கு மது, மாமிசம், குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பஞ்சாப் மற்றும் டெல்லி மாநிலத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் திருமலையில் எஸ்.என்.சி. பக்தர்கள் ஒய்வு அறையில் தங்கி அங்கு குட்கா புகைத்துள்ளனர். இதனை பார்த்த பக்தர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்து வரும் நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வந்து செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே திருமலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment