எல்லையில் பதற்றம்: என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!


இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, 2011ம் ஆண்டில் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்க கடற்படை எப்படி அந்நாட்டுக்குள் ஊடுருவி அழித்ததோ அதுபோன்றதொரு நடவடிக்கைக் கூட எடுக்கப்படலாம். இன்றைய தினத்தில் எதுவுமே நடக்கலாம். சாத்தியம்தான். அவர்கள் செய்யலாம் என்றால் நாம் ஏன் செய்ய முடியாது? அன்று அது வெறும் சிந்தனையாக மட்டும் இருந்தது. ஆனால் இன்று அவ்வாறு நம்மால் செய்ய முடியும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய எல்லையை ஒட்டியிருந்த பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி அழித்தனர்.
இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசிச் சென்றதாகவும், பாகிஸ்தான் எல்லையைத்  தாண்டி வந்த இந்திய போர் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்திருந்தார்.
மேலும், இந்திய விமானப் படை விமானம் ஒன்று பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும், அதில் இருந்த ஒரு விமானி பலியானதாகவும், மற்றொரு விமானியை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தில்லிக்கு வடக்கே உள்ள வான் பகுதி முழுவதும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய விமானியின் பெயர் அபிநந்தன் வர்த்மான் என்று தெரிவிக்கும் விடியோவையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, மிக் 21 ரக விமானத்தில் சென்ற விமானி அபிநந்தன் வர்த்மான் திரும்பவில்லை என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
 
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment