பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் - பாகிஸ்தான் பிரதமர்!



நாம் அறிவூப்பூர்வமாக செயல்படவேண்டும், பயங்கரவாதம் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையாக இருந்தாலும் நாங்கள் அதற்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்திய விமானி அபிநந்தன் கைது செய்யப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. 
இதையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பிற்பகல் 3.15 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பாகிஸ்தான் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இந்திய விமானி அபிநந்தன் மாயமானது உறுதி என்றும் அவர் தெரிவித்தார். 
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,  
"நாங்கள் நடவடிக்கை எடுத்ததன் நோக்கம், நீங்கள் எங்கள் நாட்டுக்குள் வந்தால், நாங்களும் அதை செய்வோம் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதற்காக தான். இந்தியாவின் 2 எம்ஐஜி விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். 
உலக வரலாற்றில் அனைத்து போர்களும் தவறாகவே கணிக்கப்பட்டுள்ளது. போர்களை தொடர்ந்தவர்களுக்கு அது எங்கு போய் முடியும் என்பது தெரியாது. 
அதனால், இந்தியாவுக்கு ஒரு கேள்வி எழுப்புகிறேன். நம்மிடம் இருக்கும் ஆயுதங்களை வைத்துக்கொண்டு, நாமும் தப்புக் கணக்கு போடலாமா? போர் தொடங்கினால், அது எனது கட்டுப்பாட்டிலோ அல்லது நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. 
பயங்கரவாதம் தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையாக இருந்தாலும், நாங்கள் அதற்கு தயார். நாம் அறிவூப்பூர்வமாக செயல்படவேண்டும். நாம் உட்கார்ந்து பேசுவோம்" என்றார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment