தலைமன்னார் கடற்கரை பகுதியில் ஒரு தொகை பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 912 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். அவர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை தலைமன்னார், ஊருமலை கடற்கரையிலிருந்து சுமார் 150 கிலோவிற்கு அதிகமான கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
#Smuggling #Drugs #Smoking #Beedileaves #DrugsSmuggling #Mafia #BreakingNews #MannarNews #SrilankaNavy #TamilNewsKing
0 comments:
Post a Comment