இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கரிசனை கொண்டுள்ளோம். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் நேற்று இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்கப் பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து உரையாற்றியபோதே இந்தியப் பிரதிநிதி ரஜீவ் கே சந்தர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் தெரிவித்ததாவது,
இலங்கை எமது நட்புநாடு என்றவகையில் சகல விடயங்களிலும் இந்தியா துணை நிற்கும். குறிப்பாக தேசிய ஒற்றுமை, மனித உரிமை போன்ற விடயங்களில் அதிக கரிசனை கொண்டுள்ளோம்.
அத்தோடு, இலங்கையின் தமிழ்ச் சமூகம் தொடர்பாக அதிக கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றோம்.
மீள்குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் - என்றார்.
0 comments:
Post a Comment