காதலனை காணச் சென்ற பெண் ; விடுதியில் நடந்த விவகாரம்

காதலனை காண சென்னை சென்ற பெண்ணொருவர்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர் மலர்மேரி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த அவினாஷ்  சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

மலர்மேரிக்கும், அவினாஷ்க்கும் சமூகவலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 7 மாதங்களாக இருவரும் சமூகவலைதளம் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து  மலர்மேரி தனது காதலனைப் பார்க்கச் சென்னைக்குச் சென்றுள்ளார்.

மலர்மேரியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்க வைத்தார்.  இருவரும் சென்னையில் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித் திரிந்தனர்.

இந்தநிலையில் கடந்த 25 ஆம் திகதி மலர்மேரியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் விமான டிக்கெட் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மலர்மேரி இலங்கை செல்ல மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அவினாஷ் விடுதியில் காதலியை தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்குச் சென்று விட்டார்.

மலர்மேரி தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் மலர்மேரி பிணமாகத் தொங்கினார்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மலர்மேரியின் காதலன் அவினாஷிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment