இராணுவத்தைப் புகழும் மகேஸ் சேனநாயக்க

நாட்டில் சாமானத்தை நிலை நாட்டுவதற்கும் , பயங்கரவாதத்தை இல்லாமல் ஒழிப்பதற்கும் பணியாற்றியவர்கள் இராணுவத்தினர். அவர்களின் தியாகத்தை நாம் மறந்து விடக்கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க.

அவர்கள் தற்போது நாட்டின் அபிவிருத்திக்கும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றும் பெருமிதமாகத் குறிப்பிட்டார் இராணுவத்தளபதி.

இராணுவத் தலைமையகத்தின் வழி காட்டலில் யாழ்.மாநக சபைக்கு அண்மித்த பகுதியில் அமைக்கபட்ட தகவல் தொழில் நுட்ப வள மையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

இராணுவத்தினரால் வழங்கப்படும் சேவைகளில் கண்ணிவெடி அகற்றலும் ஒரு பகுதியாக உள்ளது.  நாட்டில் 2020 ஆம் ஆண்டு கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை மாற்றப்படும்.

புதிய தொழில் நுட்பம் வளர்ந்து கொண்டு செல்கிறது. அதற்கு ஏற்ற வகையில் நாமும் வளர வேண்டும். ஆனால் அதனை அழிவுப் பாதைக்கு  நாம் கொண்டு செல்லக் கூடாது. 

தற்போது இளைஞர்கள் மத்தயில் போதை பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப் படுத்துவதற்கு நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும்-என்றார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment