விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று சிறப்பாக நடந்தது.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த, நிச்சயதார்த்த நிகழ்வில் இரு குடும்பத்தினரும், விஷாலின் நெருக்கமான நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர்.
திரையுலகினர் சிலரும் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
திருமண திகதி இன்னும் முடிவாகவில்லை. நடிகர் சங்கக் கட்டடத்தில் தான் தனது திருமணம் நடக்கும் என விஷால் அறிவித்திருந்தார். அதன்படி நடிகர் சங்கக் கட்டடம் பணிகள் நிறைவை பொறுத்து திருமண திகதி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment