இயக்குனராகும் மாதவன்!!!

' Rocketry'  படம்  மூலம்  இயக்குனர்  ஆகியுள்ளார்  நடிகர்  மாதவன். இந்தப்  படத்துக்காக  மாதவன்  வைத்திருந்த  அவருடைய  லுக்  சமூக  வலைதளங்களில்  வைரலாகி ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.


தமிழகத்தை  சேர்ந்த  இஸ்ரோ  விஞ்ஞானியான  நம்பி  நாராயணின்  வாழ்க்கை  வரலாற்றை அடிப்படையாக  கொண்டு  தயாராகி  வரும்  படம் 'Rocketry'. இந்தப்  படத்தின்  teaser  கடந்த  அக்டோபரில் வெளியானது. அந்த  teaserஇல்  மாதவனும்  ஆனந்த்   மகாதேவனும்   இணைந்து  இந்த  படத்தை  இயக்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்  இயக்குனர்  ஆனந்த்  மகாதேவன்  தவிர்க்க  முடியாத  காரணங்களால் இந்த  படத்திலிருந்து   விலகி  விட்டாதாகவும் ,  முழுக்க  முழுக்க  மாதவன்  இயக்கத்தில்  இந்த  படம்  தயாராகி  வருவதாகவும்  கூறப்படுகிறது.

' Rocketry - The Nambi Effect ' என்று  பெயர்  வைக்கப்பட்டுள்ள  அந்த படத்தில்  மாதவன்  நம்பிநாராயணனாக  நடித்து  வருகிறார். ' Rocketry - The Nambi Effect   ' படம்  இந்தி, ஆங்கிலம்  மற்றும்  தமிழ்  ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment