டெல்லியை வீழ்த்தி முன்னேறியது சென்னை

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

 டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 5 வது ஐபிஎல் போட்டியில் சென்னை - டெல்லி அணிகள் மோதின. 


நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த டெல்லி அணி, அடுத்தடுத்த விக்கெட் இழப்பால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 147 ஓட்டங்களைக் குவித்தது.


டெல்லி அணி சார்பில் ஷிகர் தவான் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை எடுத்தார்.  சென்னை அணி சார்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.


இதனையடுத்து 148 ஓட்டங்களை வெற்றி  இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 


சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் 19.4 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம்  4 புள்ளிகள் பெற்று சென்னை அணி பட்டியலில் முதலிடம் பிடித்தது.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment