மன்னார் கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம்

ஒரு சில இந்து மதத்தலைவர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக இந்துக்களை தூண்டிவிட்டு மன்னாரில் இந்து கத்தோலிக்க மக்களின் ஒற்றுமையை சீர்குழைத்து வருவதாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாந்தைப் பகுதியில் இரு சமூகத்தினரிடையே நிலவியுள்ள முறுகல் நிலை தொடர்பாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாந்தை ஆலய காணி, குளம்  தொடர்பிலான வழக்கு ஒன்றில்
இந்த இடத்தில் வீதி மற்றும் வளைவு குறித்து பிரஸ்தாபிக்கப்பட்ட
நிலையில் கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இது இவ்வாறு இருக்க சிவராத்திரி தினத்தைச் சாட்டாக வைத்து மன்னார் மாந்தை ஆலயத்துக்கு முன்பாக புதிய நிலையான வளைவு ஒன்று
அமைப்பதற்கான நடவடிக்கையை இந்து சமய நிர்வாகம் நடவடிக்கையை
முன்னெடுத்துள்ளது.

இவ் வழக்கில் இருக்கும் ஒரு முக்கியஸ்தர் இவ் இடத்தில் வளைவை அமைப்பில் பின்னனியில் இருந்து செயல்படுவதாலேயே வளைவு அமைப்பதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றின் தீர்ப்பு வருவதற்கு முன் இந்த வளைவு அமைப்பது ஒரு தன்னிச்சையான செயல்பாடாக அமைந்துள்ளது.

இந்த செயல்பாடு  கத்தோலிக்க மக்கள் மனதைப் புண்படுத்தியதால்தான் நேற்று இந்து கத்தோலிக்க மக்கள் மத்தியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலுவையிலிருக்கும் இவ்விடம்  தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு வரும்
வரைக்கும் இரு பகுதியினரும் பொறுமையாக இருந்து செயல்பட வேண்டியிருப்பதற்கு பதிலாக ஒரு சமூகத்தைத் தூண்டிவிட்டு சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டதாலேயே இரு சமூகத்தின் மத்தியில் தற்பொழுது முறுகல் நிலை தோன்றியது.

உண்மைநிலை அறியாத சிலர் சமூக வலைத்தளங்களில் கத்தோலிக்கரே
முதலில் இருந்த வளைவை உடைத்ததாகவும் கத்தோலிக்கராலேயே பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டதாகவும் தவறான பதிவுகளை வெளியிட்டு வருவது கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

உண்மையான நிலை என்னவென்றால் நீதிமன்றத் தீர்ப்பை இன்னும் எட்டாமல் மாந்தை ஆலயத்துக்கு முன்பாக கனகரக வாகனம் மூலம் நிலையான வளைவு ஒன்றை அமைக்கப்பட்டபோதே அதனைத் தடுத்து நிறுத்த கத்தோலிக்கர் முற்பட்டனர்.

கடந்த காலங்களில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாந்தை பிரதான பாதையில் இவ்வாறான தற்காலிக வளைவு இடப்பட்டு பின் அது தற்பொழுது நிலையான வளைவாக அமைக்கப்பட்டபோது கத்தோலிக்கர் செறிந்து வாழும் இவ் பகுதியில் இவர்கள் அவற்றுக்கு எதிராக எந்த செயல்பாட்டிலும் இறங்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

தங்கள் சுய இலாபத்துக்காக ஒரு சில இந்து சமயத் தலைவர்கள் இந்து
மக்களை தவறான வழியில் வழிநடத்தி கத்தோலிக்க மக்கள் மீது தேவையற்ற பழி சுமத்தி வருகின்றனர்.

ஆகவே எவராக இருந்தாலும் உரியவர்களிடம் சரியான விபரங்களை கேட்டறிந்து அவற்றை வெளியிடுவது சிறந்ததாகும். இவ்வாறு இருக்குமாகில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டிலே குழப்ப நிலை தோன்றாது இருப்பதற்கு இது வழி சமைக்கும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment